விமானப்படை சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்தது வேதனையளிக்கிறது - த.வெ.க தலைவர் விஜய்


விமானப்படை சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்தது வேதனையளிக்கிறது - த.வெ.க தலைவர் விஜய்
x

கோப்புப்படம் 

இனி வரும் காலங்களில் மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை வசதிகளை செயல்படுத்துவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று விஜய் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னையில் இந்திய விமானப்படை சார்பில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு, வேதனையளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிகழ்ச்சியின்போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள், தங்கள் வேதனையை வெளிப்படுத்திய செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன.

இப்படி மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்படச் செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story