ராக்கெட் முதல் வாகனங்கள் வரை எரிசக்தியை சிக்கனப்படுத்தி உருவாக்கும் ஆராய்ச்சியில் மாணவர்கள் ஈடுபட வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்


ராக்கெட் முதல் வாகனங்கள் வரை எரிசக்தியை சிக்கனப்படுத்தி உருவாக்கும் ஆராய்ச்சியில் மாணவர்கள் ஈடுபட வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்
x

சென்னை ஐஐடி வளாகத்தில் வான்வெளி குறித்து நடைபெற்ற கருத்தரங்கில் பல்வேறு நாடுகளை சேர்ந்த நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை,

சென்னை ஐஐடி வளாகத்தில் வான்வெளி குறித்து நடைபெற்ற கருத்தரங்கில் பல்வேறு நாடுகளை சேர்ந்த நிபுணர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், "மாணவர்கள் விண்வெளி குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு, அறிக்கைகளை சமர்ப்பித்தால், இஸ்ரோவின் சார்பில் செய்யும் ஆய்வுகளுக்கு அது உதவியாக அமையும்.

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் வகையில், எரிசக்தியை சிக்கனப்படுத்தி ராக்கெட்டுகள் முதல் வாகனங்கள் வரை உருவாக்க, மாணவர்கள் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்" என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.

1 More update

Next Story