இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்...


இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்...
x
தினத்தந்தி 6 Oct 2023 2:03 PM IST (Updated: 6 Oct 2023 3:05 PM IST)
t-max-icont-min-icon

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக சங்கத்தினர் அறிவித்தனர்.

சென்னை,

'சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினரும், பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம், ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கத்தினரும், டெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மீண்டும் போட்டித் தேர்வு நடத்தக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதில் பகுதிநிலை ஆசிரியர்கள் மற்றும் டெட் ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இந்நிலையில் இன்று காலை இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் பள்ளிகளுக்கு செல்லாமல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தனர்.மேலும் எண்ணும் எழுத்தும் திட்டம் மற்றும் பள்ளி வகுப்புகளை புறக்கணிக்கும் போராட்டம் தொடரும் என்றும் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் அரசு அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவித்துள்ளனர். இதில் 3 மாதத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதாக தமிழக முதல்-அமைச்சரும் , பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் இன்று முதல் பணிக்கு திருப்புவதாகவும், மாணவர்களின் நலன் கருதி வரும் 9-ம் தேதி பள்ளிக்கு செல்வதாக அவர்கள் தெரிவித்தனர்.


Next Story