திருமணநாளை போலீஸ் நிலையத்தில் கொண்டாடிய இன்ஸ்பெக்டர்


திருமணநாளை போலீஸ் நிலையத்தில் கொண்டாடிய இன்ஸ்பெக்டர்
x

ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் தனது திருமண நாளை போலீஸ் நிலையத்தில் கொண்டாடினார்.

அரியலூர்

ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சுமதி. இவர் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தவர் ஆவார். மேலும், சக போலீசாருடன் இணக்கமாக பணியாற்றும் குணம்கொண்டவர். இன்ஸ்பெக்டர் சுமதிக்கு நேற்று திருமண நாள். இருப்பினும் அவர் விடுப்பு எடுக்காமல் பணிக்கு வந்திருந்தார். விசாரணைக்காக சாதாரண உடையில் வெளியே சென்றிருந்தபோது சக பெண் போலீசார் அவரது திருமண நாளை போலீஸ் நிலையத்தில் கொண்டாட முடிவு செய்திருந்தனர். விசாரணை பணியை முடித்து கொண்டு போலீஸ் நிலையத்திற்கு வந்த சுமதி தனது மேஜையில் கேக் வைக்கப்பட்டு இருந்ததையும், பலூன்கள் பறந்து கொண்டிருப்பதை பார்த்து திகைத்தார். உடனிருந்த பெண் போலீசார் அவருக்கு வாழ்த்து தெரிவித்து கேக் வெட்டச்செய்து அவரது திருமண நாளை கொண்டாடினர். இதில் புகார் அளிக்கவும், விசாரணைக்காகவும் வந்திருந்தவர்களும் தகவல் அறிந்து இன்ஸ்பெக்டர் சுமதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அவர் உட்கோட்டை கிராமத்தில் நடந்த கொலை சம்பவம் குறித்து விசாரணைக்கு புறப்பட்டு சென்றார். இவரின் கடமை உணர்ச்சியை அதிகாரிகள் பாராட்டியதுடன் அவருக்கு வாழ்த்தும் தெரிவித்தனர்.


Next Story