பட்டாசு குடோனில் கலெக்டர் சாந்தி ஆய்வு


பட்டாசு குடோனில் கலெக்டர் சாந்தி ஆய்வு
x
தினத்தந்தி 17 Oct 2023 1:00 AM IST (Updated: 17 Oct 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

பொம்மிடியில் பட்டாசு குடோனில் கலெக்டர் சாந்தி ஆய்வு செய்தார்.

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பொம்மிடியில் பட்டாசு குடோனில் கலெக்டர் சாந்தி ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

தர்மபுரி மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு உற்பத்தி, குடோன் மற்றும் விற்பனை கடைகளை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே பொம்மிடியில் உள்ள தனியார் பட்டாசு குடோனில் கலெக்டர் சாந்தி ஆய்வு செய்தார். அப்போது, வரைபடத்தில் உள்ளவாறு கட்டிட அமைப்பு உள்ளதா? எனவும், உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவின்படி மட்டுமே இருப்பு உள்ளதா? எனவும், கேட்டறிந்தார். குடோனில் பட்டாசுகளை பாதுகாப்பாக வைத்திட வேண்டும். அனைத்து பாதுகாப்பு கருவிகளையும் முறையாக பராமரிக்க வேண்டும்.

அலுவலர்களுக்கு உத்தரவு

பட்டாசு எடுத்து வரும் வாகனங்களை வெளி பகுதியில் மட்டுமே நிறுத்தவேண்டும் என உரிமையாளரிடம் அறிவுறுத்தினார். தீயணைப்பு கருவிகளை உரிய ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வருவாய்த்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

பின்னர் கடத்தூர் அருகே உள்ள மடதஅள்ளி பகுதியில் இயங்கி வரும் ஜல்லி கிரசர், கல்குவாரி ஆகியவற்றையும் கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் வள்ளி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story