காட்டுமன்னார்கோவில் டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபாட்டிலுக்குள் பூச்சி கிடந்ததால் பரபரப்பு


காட்டுமன்னார்கோவில்  டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபாட்டிலுக்குள் பூச்சி கிடந்ததால் பரபரப்பு
x

காட்டுமன்னார்கோவில் டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபாட்டிலுக்குள் பூச்சி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் பேரூராட்சிக்குட்பட்ட தெற்கிருப்பு பகுதியில் 3 டாஸ்மார்க் கடைகள் இயங்கி வருகிறது. நேற்று மாலை காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த மதுப்பிரியர் ஒருவர் அங்குள்ள ஒரு கடையில் ரூ.160 கொடுத்து குவாட்டர் அளவிலான மதுபாட்டில் ஒன்றை வாங்கினார். அப்போது அந்த மதுபாட்டிலுக்குள் பூச்சி ஒன்று செத்து மிதந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மதுப்பிரியர் டாஸ்மாக் கடை விற்பனையாளரிடம் சென்று, மதுபாட்டிலில் பூச்சி கிடப்பதாக கூறி அதனை மாற்றித்தரவேண்டும் என கூறினார். அதற்கு விற்பனையாளர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த மதுப்பிரியர்கள் விற்பனையாளரிடம் பூச்சி உள்ள மதுபாட்டிலை மாற்றித் தாருங்கள் என கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விற்பனையாளர் பூச்சி கிடந்த மதுபாட்டிலை வாங்கிக் கொண்டு, வேறு மதுபாட்டிலை அந்த மதுப்பிரியருக்கு வழங்கினார். மேலும் இதுதொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது.

1 More update

Next Story