இந்தியன் வங்கி அணி சாம்பியன்


இந்தியன் வங்கி அணி சாம்பியன்
x

மாநில கூடைப்பந்து போட்டியில் இந்தியன் வங்கி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

திண்டுக்கல்

மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் உள்ள மாநகராட்சி கூடைப்பந்து மைதானத்தில் கடந்த 9-ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. இதில் ரெயில்வே, இந்தியன்வங்கி, தமிழ்நாடு போலீஸ் மற்றும் சென்னை, மதுரை, கோவை என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கல்லூரி அணிகள் பங்கேற்று விளையாடின. போட்டிகள் லீக் நாக் அவுட் சுற்று அடிப்படையில் நடந்தது. நேற்று முன்தினம் இரவு அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் நடந்தது.

பெண்களுக்கான இறுதிப்போட்டியில் சென்னை ரைசிங் ஸ்டார், எஸ்.பி.சி அணிகள் மோதின. இதில் 49-26 என்ற புள்ளி கணக்கில் சென்னை ரைசிங் ஸ்டார் வெற்றிபெற்றது. அதைத்தொடர்ந்து நடந்த ஆண்களுக்கன இறுதிப்போட்டியில் சென்னை இந்தியன் வங்கி- தமிழ்நாடு பட்டாலியன் போலீஸ் அணியும் மோதியது. இதில் 72-44 என்ற புள்ளிக் கணக்கில் சென்னை இந்தியன் வங்கிஅணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

ஆண்கள் பிரிவில் கோவை யுனைடெட் அணி 3-வது இடமும், திண்டுக்கல் அணி 4-வது இடமும் பிடித்தன. இதேபோல் பெண்கள் பிரிவில் தமிழ்நாடு போலீஸ் அணி 3-வது இடமும், சேலம் செயின்ட் ஜோசப் கல்லூரி அணி 4-வது இடமும் பிடித்தன. முதலிடம் பிடித்த அணிகளுக்கு ரூ.30 ஆயிரம், 2-வது இடம் பிடித்த அணிகளுக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கப்பரிசுடன் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டது. பரிசளிப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் மேயர் இளமதி, துணைமேயர் ராஜப்பா உள்பட பலர் கலந்துகொண்டனர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பு செயலாளர் ரவி உள்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story