ராமர் இல்லாமல் பாரத நாட்டை நினைத்து பார்க்க முடியாது - கவர்னர் ஆர்.என்.ரவி
ராமர் இல்லாமல் பாரத நாட்டை நினைத்து பார்க்க முடியாது. ராமர், பாரத், தமிழகத்தை பிரிக்க முடியாது என கூறினார்.
சென்னை,
சென்னையில் நாரத கான சபாநிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போது அங்கு அவர் பேசியதாவது,
ராம ராஜ்ஜியத்தின் அஸ்திவாரம் அமைத்த நாள் இன்று. சுதந்திர தினம் எவ்வளவு முக்கியமோ அது போன்ற நாள் இது. ராமர் இல்லாமல் பாரத நாட்டை நினைத்து பார்க்க முடியாது. ராமர், பாரத், தமிழகத்தை பிரிக்க முடியாது. தமிழ் இலக்கியங்களில் ராமர் குறித்து குறிப்பிட்டுள்ளனர்.
நாம் அனைவரும் ஒன்று என பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சனாதன தர்மத்தில் உள்ளது. சுயநலம் காரணமாக மொழி, மதம் அடிப்படையில் சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தி வருகின்றனர்.
உலக பிரச்சினைகளுக்கு தீர்வுகளை உலக நாடுகள் இந்தியாவிடன் எதிர்பார்க்கின்றன. இந்தியாவை உலகின் நம்பர் 1 நாடாக மாற்ற அனைவரும் உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story