வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு


வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு
x

வார விடுமுறை நாள் என்பதால் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை இன்று அதிகரித்து காணப்பட்டது.

திண்டுக்கல்,

வார விடுமுறை நாள் என்பதால் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை இன்று அதிகரித்து காணப்பட்டது. மோயர் சதுக்கம், பைன் மரச்சோலை, பில்லர் ராக், குணாக்குகை, பிரையன்ட் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் இயற்கை அழகினை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

மேலும் நட்சத்திர ஏரியில் படகு சவாரி மேற்கொண்டும் ஏரியை சுற்றி சைக்கிள் மற்றும் குதிரை சவாரி மேற்கொண்டும் மகிழ்ந்தனர். இதனிடையே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் தொழில் புரிவோரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

1 More update

Next Story