பருப்பு வகைகள் விலை உயர்வு


பருப்பு வகைகள் விலை உயர்வு
x

விருதுநகர் மார்க்கெட்டில் பருப்பு வகைகளின் விலை உயர்ந்து காணப்பட்டது.

விருதுநகர்


விருதுநகர் மார்க்கெட்டில் பருப்பு வகைகளின் விலை உயர்ந்து காணப்பட்டது.

பாசிப்பருப்பு

விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்து 100 கிலோ மூடைக்கு ரூ.200 விலை உயர்ந்து ரூ.8,500 ஆகவும், உருட்டு உளுந்தம் பருப்பு ரூ.400 விலை உயர்ந்து ரூ.11,500 ஆகவும், தொலி உளுந்தம் பருப்பு ரூ.9,800 ஆகவும் விற்பனை ஆனது. பாசிப்பருப்பு 100 கிலோ மூடை ரூ.10,500 ஆகவும், பாசிப்பயறு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.

துவரை 100 கிலோ மூடை ரூ.6,400 முதல் ரூ.7,700 வரையிலும், துவரம் பருப்பு 100 கிலோ மூடைக்கு ரூ.800 விலை உயர்ந்து ரூ.12,500 முதல் ரூ.14,000 வரையிலும் விற்பனையானது. மல்லி லயன் ரகம் 40 கிலோவிற்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.3,200 வரையிலும், மல்லி நாடு ரகம் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.3,800 வரையிலும் விற்பனை ஆனது.

பொரிகடலை

முண்டு வத்தல் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரையிலும், ஏ.சி.வத்தல் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.27 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.

கடலை எண்ணெய் 15 கிலோவிற்கு ரூ.100 விலை குறைந்து ரூ.3 ஆயிரம் ஆகவும், நல்லெண்ணெய் 15 கிலோ ரூ.6,600 ஆகவும், பாமாயில் 15 கிலோவிற்கு ரூ.40 விலை குறைந்து ரூ.1,400 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ரூ.2,500 ஆகவும் விற்பனையானது. நிலக்கடலை பருப்பு 80 கிலோ ரூ.7 ஆயிரம் ஆகவும் விற்பனையானது. கடலை புண்ணாக்கு 100 கிலோவிற்கு ரூ.100 விலை உயர்ந்து ரூ.5,500 ஆகவும், எள் புண்ணாக்கு 50 கிலோவிற்கு ரூ.2,450 ஆகவும் விற்பனையானது. சீனி 100 கிலோவிற்கு ரூ.20 விலை குறைந்து ரூ.3,900 ஆகவும், கொண்டைக்கடலை குவிண்டால் ரூ.5,600 ஆகவும், பொரிகடலை 50 கிலோ ரூ.4,100 ஆகவும் விற்பனை ஆனது.

பட்டாணி பருப்பு

மைதா முதல் ரகம் ரூ.4,360 ஆகவும், 2-ம் ரகம் ரூ.3,600 ஆகவும், ஆட்டா 25 கிலோ ரூ.1,150 ஆகவும், ரவை 30 கிலோ ரூ.1,460 ஆகவும், கோதுமை தவிடு 50 கிலோ ரூ.1,040 ஆகவும் விற்பனை ஆனது.

பட்டாணி 100 கிலோ ரூ.5,600 முதல் ரூ.6,200 வரையிலும், பட்டாணி பருப்பு ரூ.6 ஆயிரம் ஆகவும், மசூர் பருப்பு ரூ.10,800 ஆகவும் விற்பனையானது. காபி பிளாண்டேஷன் பிபி ரகம் 50 கிலோ ரூ.20,100 ஆகவும், ஏ ரகம் ரூ.20,600 ஆகவும், சி ரகம் ரூ.17,300 ஆகவும், ரோபஸ்டா பிபி ரகம் ரூ.10,700 ஆகவும், பிளாக் பிரவுன் ரகம் ரூ.9,600 ஆகவும் விற்பனையானது.


Next Story