போகி நாளில் கழிவுப் பொருட்களை எரிப்பது குறைந்துள்ளது - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்
சென்னையில் 15 மண்டலங்களில் காற்று மாசு அளவு அனுமதிக்கப்பட்ட அளவில் இருந்தது.
சென்னை,
போகி பண்டிகையையொட்டி கழிவுப் பொருட்களை எரிப்பது குறைந்துள்ளது என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
போகி பண்டிகையையொட்டி சென்னை வளசரவாக்கத்தில் அதிகபட்சமாக 270ஆக காற்று தரக்குறியீடு பதிவாகியுள்ளது . குறைந்தபட்சமாக அண்ணாநகரில் காற்று தரக்குறியீடு 131ஆக பதிவாகியுள்ளது .
போகி நாளில் சென்னையில் 15 மண்டலங்களில் காற்று மாசு அளவு அனுமதிக்கப்பட்ட அளவில் இருந்தது
நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை கழிவுப்பொருட்களை எரிப்பது குறைந்துள்ளது. விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் டயர், டியூப், பிளாஸ்டிக் எரிப்பது குறைந்தது என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story