பேவர் பிளாக் சாலை திறப்பு விழா


பேவர் பிளாக் சாலை திறப்பு விழா
x
தினத்தந்தி 22 Feb 2023 12:15 AM IST (Updated: 22 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராயகிரி பகுதியில் பேவர் பிளாக் சாலை திறப்பு விழா நடந்தது.

தென்காசி

சிவகிரி:

ராயகிரி பேரூராட்சி 4-வது வார்டில் பேவர் பிளாக்சாலை, மழை நீர் வடிகால் வாருகால்கள் ரூ.34.80 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம். எல்.ஏ. கலந்து கொண்டு திறந்து வைத்தார். ராயகிரி பேரூராட்சி தலைவர் இந்திரா தலைமை தாங்கினார். தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சவுக்கை சீனிவாசன், ஒன்றிய செயலாளர் பொன் முத்தையா பாண்டியன், பேரூர் செயலாளர் கே.டி.சி. குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் சுதா வரவேற்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளரும் சிவகிரி பேரூர் செயலாளருமான டாக்டர் செண்பக விநாயகம், பேரூராட்சி துணைத்தலைவர் குறிஞ்சி மகேஷ், ஒன்றிய செயலாளர் பெரியதுரை, சங்கரன்கோவில் நகராட்சி செயலாளர் பிரகாஷ், முன்னாள் பொறுப்புக்குழு உறுப்பினர் செல்வராஜ், வர்த்தக அணி ராஜகுரு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் விவேகானந்தன் நன்றி கூறினார்.




Next Story