பாலமுருகன் கோவில் அறுகோண தெப்பக் குளம் திறப்பு விழா


பாலமுருகன் கோவில் அறுகோண தெப்பக் குளம் திறப்பு விழா
x

ரத்தினகிரி பாலமுருகன் கோவில் அறுகோண தெப்பக் குளம் திறப்பு விழா நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோவில் மலையடி வாரத்தில் அறுகோண வடிவில் தெப்பக்குளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் வலம்புரி விநாயகர், பாலமுருகன் சன்னதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விநாயகர் மற்றும் பாலமுருகன் சன்னதி கும்பாபிஷேகம் மற்றும் சண்முக புஷ்கரணி என்னும் தடாக பிரதிஷ்டை, தெப்பக்குளம் திறப்பு விழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு கோவில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகன் அடிமை சுவாமிகள் முன்னிலையில் மகா சண்டி யாகம், 108 கலசாபிஷேகம், கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், யாக பூஜைகள், மகா தீபாராதனை, ரக்ஷா பந்தனம், பூர்ணாஹூதி, யாத்ரா தானம் நடைபெற்றது. தஒடர்ந்து நேற்று வலம்புரி விநாயகர், பாலமுருகன் சன்னதிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மாலையில் தெப்பக்குளத்திற்கு சிறப்பு பூஜைகள், புண்ணிய தீர்த்தங்கள் கொண்டு தடாக பிரதிஷ்டை செய்யப்பட்டு, அறுகோண தெப்பக்குளம் திறப்பு விழா நடைபெற்றது.

விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கலவை சச்சிதானந்த சுவாமிகள், சித்தஞ்சி மோகனாந்த சுவாமிகள், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி, திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story