அம்பாரி மகளிர் கலை அறிவியல் கல்லூரி தொடக்க விழா


அம்பாரி மகளிர் கலை அறிவியல் கல்லூரி தொடக்க விழா
x

தணிகை போளூரில் அம்பாரி மகளிர் கலை அறிவியல் கல்லூரி தொடக்க விழா நடைபெற்றது.

ராணிப்பேட்டை

அரக்கோணத்தை அடுத்த தணிகை போளூரில் அரக்கோணம் விவேகானந்தா வித்யாலயா கல்வி குழுமத்தின் அம்பாரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடக்க விழா நடைபெற்றது. கல்வி குழு செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குனர் கலியபெருமாள் வரவேற்றார்.

விவேகானந்தா கல்வி குழுமத்தின் தலைவர் ஏ.சுப்பிரமணியம் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் மெட்ரிக்குலேஷன், சி.பி.எஸ்.இ. பள்ளி, பி.எட். கல்லூரி என தொடர்ந்து புதிதாக மகளிர் கல்லூரி பி.சி.ஏ., பி.எஸ்சி. பி.காம்., பி.பி.ஏ. ஆகிய பாட பிரிவுகளுடன் தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம் என்றார்.

கல்லூரி மாணவர்களுக்கான கல்ச்சுரல் கிளப் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் ரோட்ராக்ட் கிளப் ஆகியவை தொடங்கி வைக்கப்பட்டது. ரோட்டரி சங்க தலைவர் மணிகண்டன், செயலாளர் மனோகர் பிரபு ஆகியோர் ரோட்ராக்ட் கிளப் குறித்து விளக்கி பேசினர். விவேகானந்தா கல்வி குழுமத்தின் மெட்ரிக் பள்ளி முதல்வர் ராஜன், சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் அருணாதேவி, பி.எட். கல்லூரி முதல்வர் கஜேந்திரன், அரக்கோணம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பிரகாஷ், தணிகை போளூர் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் வெங்கடரமணன், சீனிவாசன் மற்றும் கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி முதல்வர் பரிமளா நன்றி கூறினார்.


Next Story