பாம்பன் பகுதியில், சுமார் 300 மீட்டர் தொலைவிற்கு திடீரென உள்வாங்கிய கடல்


பாம்பன் பகுதியில், சுமார் 300 மீட்டர் தொலைவிற்கு திடீரென உள்வாங்கிய கடல்
x

கடல் உள்வாங்கியதால், அப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த நாட்டு படகுகள் தரை தட்டி நின்றன.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் சுமார் 300 மீட்டர் தொலைவுக்கு கடல் திடீரென உள்வாங்கியுள்ளது. இதனால், மீனவர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடல் உள்வாங்கியதால், அப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த நாட்டு படகுகள் தரை தட்டி நின்றன. அத்துடன், பாறைகள், கடல் புற்கள் ஆகியவை வெளியே தெரிந்தன.

காலநிலை மாற்றத்தின் காரணமாக கடல்நீர் உள்வாங்கியுள்ளது என்றும், சிறிது நேரத்தில் கடல் இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

1 More update

Next Story