பழனி முருகன் கோவிலில் பக்தர்களை ஏற்றி சென்ற ரோப் கார் பாறை மீது உரசியதால் பரபரப்பு
பழனி முருகன் கோவிலில் பக்தர்களை ஏற்றி சென்ற ரோப் கார் பாறை மீது உரசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்,
பழனி மலைக்கோவிலுக்கு பக்தர்கள் எளிதாக செல்லும் வகையில் ரோப்கார் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று பழனிமலைக்கு செல்லும் ரோப் காரானது அதிக பாரம் காரணமாக பாறை மீது உரசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ரோப் காரின் ஒருபகுதி சிறிதளவு சேதமானது.
ரோப் கார் சேவையானது காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட்டு வருவது வழக்கம். ஒரு பெட்டிக்கு 4 பேர் வீதம் மொத்தம் 4 பெட்டிகளில் 16 பேர் கீழிலிருந்து மேலே பயணம் செய்யலாம். இந்த நிலையில் அதிக எடை காரணமாக இன்று ரோப் கார் பெட்டியானது தாழ்வாக சென்றதில் பாறை மீது மோதி சிறிது பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாரத்தை குறைத்தபின்பு மீண்டும் ரோப் கார் சேவை இயக்கப்பட்டது.
Related Tags :
Next Story