இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அரசுப் பேருந்துகள் அதிகம் இயக்கப்படுகின்றன: அமைச்சர் சிவசங்கர்


இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அரசுப் பேருந்துகள் அதிகம் இயக்கப்படுகின்றன: அமைச்சர் சிவசங்கர்
x

தமிழ்நாட்டில் குக்கிராமம் வரை அரசு பேருந்துகள் செல்வதாக அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

நெல்லை,

நெல்லையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

தமிழகத்தின் குக்கிராமம் வரை அரசுப் பேருந்துகள் செல்லும் நிலை உள்ளது; இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அரசுப் பேருந்துகள் அதிகம் இயக்கப்படுகின்றன

நெருக்கடியான நிலைக்கு சென்ற போக்குவரத்து துறை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் தான் புத்துயிர் ஊட்டப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பல மாநிலங்களில் 20% பேருந்துகள் கூட இல்லாத நிலை தான் உள்ளது.

தமிழ்நாட்டில் குக்கிராமம் வரை அரசு பேருந்துகள் செல்கிறது. நேரத்திற்கு செல்லும் பேருந்துகளும் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது. டீசல் மானியம், இலவசப் பேருந்து ஆகியவற்றால் போக்குவரத்துத் துறை சிறப்பாக செயல்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் குறைவான பேருந்துகள் மட்டுமே வாங்கியதால் பழைய பேருந்துகளை வைத்து ஓட்டும் நிலை உள்ளது. நெல்லை மண்டலத்திற்கு 199 புதிய பேருந்துகள் ஒதுக்கப்பட்டு, 144 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் 302 புதிய பேருந்துகள் வர உள்ளது."

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story