தேனியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் தேசிய கொடி விற்பனை


தேனியில்  நகராட்சி நிர்வாகம் சார்பில் தேசிய கொடி விற்பனை
x

தேனி அல்லி நகரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் தேசிய கொடி விற்பனை நடந்தது

தேனி

75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவையொட்டி அனைத்து வீடுகள், வணிக நிறுவனங்கள், பள்ளிகள் உள்பட அனைத்து இடங்களிலும் வருகிற 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை தேசியகொடியை பறக்க விட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, தேனி மாவட்டத்தில் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றுவதற்காக பல்வேறு கட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் சார்பில், பொதுமக்களுக்கு தேசிய கொடி எளிதில் கிடைக்கும் வகையில் மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனை செய்யும் பணி இன்று தொடங்கியது. நகராட்சி அலுவலகத்தில் தேசியகொடி விற்பனையை நகர்மன்ற தலைவர் ரேணுப்பிரியா தொடங்கி வைத்தார். அப்போது நகர்மன்ற ஆணையாளர் வீரமுத்துக்குமார், சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர். ஒரு தேசிய கொடி ரூ.21 வீதம் விற்பனை செய்யப்படுகிறது. நகராட்சி அலுவலகம், பழைய பஸ் நிலையம் மற்றும் பள்ளி வளாகங்களில் நகராட்சி நிர்வாகம் சார்பில் விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story