பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு.!


பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு.!
x

பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந் 20-ந்தேதி வெளியானது. தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகளை வெளியிட்டார். 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 93.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள், மேலும் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான் பின் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்படும்.

12-ம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நடைபெறும். 11-ம் வகுப்பு துணைத்தேர்வு ஆகஸ்ட் 2 முதல் 10-ம் தேதி வரை நடைபெறும். 10-ம் வகுப்பு துணைத்தேர்வு ஆகஸ்ட் 2 முதல் 8-ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.


Next Story