காவல்துறை சார்பில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 145 மனுக்களுக்கு உடனடி தீர்வு
காவல்துறை சார்பில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 145 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் வாரந்தோறும் புதன்கிழமையன்று மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதன்படி நேற்று முன்தினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து புகார் மனுக்களை பெற்றார். அதேபோல் விழுப்புரம், செஞ்சி, கோட்டக்குப்பம், திண்டிவனம் ஆகிய உட்கோட்டங்களில் அந்தந்த உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில், மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டங்களில் மொத்தம் 197 புகார் மனுக்கள் பெறப்பட்டதில், 145 மனுக்களின் மீது உடனடி விசாரணை செய்து தீர்வு காணப்பட்டது. 52 மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story