தியாகி இமானுவேல் சேகரனின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் - டாக்டர் ராமதாஸ்


தியாகி இமானுவேல் சேகரனின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் - டாக்டர் ராமதாஸ்
x

தியாகி இமானுவேல் சேகரனின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கையை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருவதாக டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

சுதந்திர போராட்ட தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு நாளில் (இன்று) அவரது தியாகத்தையும், போர்க்குணத்தையும் போற்றுவோம். தியாகி இமானுவேல் சேகரனின் நினைவிடத்தை 30 ஆண்டுகளுக்கு முன் சீரமைத்து அங்கு முதன்முறையாக மரியாதை செலுத்தியது இந்த ராமதாசு தான். அதன்பிறகு தான் அங்கு மற்ற கட்சிகளின் தலைவர்கள் செல்லத் தொடங்கினார்கள். அந்த பெருமிதம் எனக்கு எப்போதும் உண்டு. தியாகி இமானுவேல் சேகரனின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கையை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். வரும் அக்டோபர் 9-ந்தேதி அவரது 98-வது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு ஆணையிட வேண்டும். இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா அடுத்த ஆண்டு அக்டோபர் 9-ந்தேதி தொடங்குகிறது. அன்று முதல் ஓராண்டுக்கு அதைக் கொண்டாடவும், அவரது வரலாறு, தியாகம் போன்றவற்றை மக்களிடம் கொண்டு செல்லவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story