மேல்நிலை தொட்டி இயக்குபவர்களுக்கு அடையாள அட்டை


மேல்நிலை தொட்டி இயக்குபவர்களுக்கு அடையாள அட்டை
x
தினத்தந்தி 9 Dec 2022 7:00 PM (Updated: 9 Dec 2022 7:01 PM)
t-max-icont-min-icon

வேடசந்தூரில் மேல்நிலை தொட்டி இயக்குபவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

திண்டுக்கல்

வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கிராம மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கத்தின் சார்பில் அலுவலகத்தில் கொடியேற்றி, உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு சங்க வட்டார தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். சங்க மாநில தலைவர் கிருஷ்ணசாமி சிறப்புரை ஆற்றினார். மாவட்ட தலைவர் பெருமாள், செயலாளர் குருசாமி, பொருளாளர் சந்தியாகு, துணை தலைவர் ராஜேந்திரன், மக்கள் நல பணியாளர்கள் சங்க மாநில பொருளாளர் ரங்கராஜ் ஆகியோர் பேசினர். விழாவில் சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story