விஜய் கட்சி மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் செல்வேன்- சீமான்


விஜய் கட்சி மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் செல்வேன்- சீமான்
x

விஜய்யின் தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் செல்வேன் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மே 18 இனப்படுகொலை நாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் சார்பில் சென்னை போரூரில் இன எழுச்சி நாள் நிகழ்வு நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்குப்பின் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அந்த கேள்விகளுக்கு சீமான் பதில் அளித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது,

விடுதலைப்புலிகள் என்ற பெயருக்கே ஏன் தடை, தடையை நீக்கி விட்டால் நாங்கள் வேகமாக வளர்ந்து விடுவோம், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எங்கள் இன வரலாறு இருக்கும் அதற்காகவாவது அண்ணன் வரவேண்டும் என வேண்டிக் கொள்ளுங்கள்.

கோவில், மசூதிகளை இடிப்பது எல்லாம் பா.ஜ.க. வேலை. பத்தாண்டு கால ஆட்சியில் செய்த சாதனைகளை கூறி வாக்கு கேட்க முடியவில்லை. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அடிக்கடி பழுதாகிறது யோசிக்க வேண்டிய விஷயம்.

சவுக்கு சங்கர் பேசியது தவறு, ஒரு பெண் என்னை பற்றி 15 ஆண்டுகள் தவறாக பேசியபோது நீங்கள் கொண்டாடினீர்கள். பெலிக்சை கைது செய்தது மிகப்பெரிய தவறு அவரது வீட்டில் எதற்காக சோதனை செய்கிறீர்கள். மறைந்த விஜயகாந்த்திற்கு பத்மபூஷன் விருது கொடுத்ததை வரவேற்கிறேன். அதற்கு தகுதியான நபர் அவர். விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் செல்வேன், பங்கேற்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story