டி.ஆர்.பி.ராஜா தொழில்துறையில் அதிக முதலீடுகளை ஈர்ப்பார் என நம்புகிறேன்... முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்


டி.ஆர்.பி.ராஜா தொழில்துறையில் அதிக முதலீடுகளை ஈர்ப்பார் என நம்புகிறேன்... முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 11 May 2023 1:01 PM IST (Updated: 11 May 2023 1:05 PM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஹூண்டாய் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

சென்னை,

மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ.வான டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமானம் செய்துவைத்தார்.

அவர் தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதனை தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.20,000 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சியில் புதிய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பங்கேற்றார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஹூண்டாய் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை தொடர்ந்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;

தொழில் துறை நிகழ்ச்சியில்தான் நான் அதிகமாக கலந்து கொண்டுள்ளேன். தமிழகம் மின்சாரக் கார் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவிலேயே 2வது பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக திகழ்கிறது.

புதிதாக அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ள டி.ஆர்.பி ராஜா சிறப்பாக செயல்பட்டு அதிகம் முதலீட்டை ஈர்ப்பார் என்று உறுதியாக நம்புகிறேன், அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நிர்வாக வசதிக்காக அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது. அமைச்சர்களின் இலாக்காக்கள் மாறினாலும் தொழிற்சாலைகளுக்கும் தொழில்துறைக்கும் தமிழ்நாடு அரசு வழங்கி வரும் ஒத்துழைப்பு தொடரும். இவ்வாறு முதல் அமைச்சர் பேசினார்.


Next Story