கலெக்டர் அலுவலகத்தில் கணவன்-மனைவி தீக்குளிக்க முயற்சி


கலெக்டர் அலுவலகத்தில் கணவன்-மனைவி தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 18 July 2023 12:15 AM IST (Updated: 18 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் கணவன்-மனைவி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம் அருகே சு.பலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். விவசாயி. இவர் நேற்று தனது மனைவியுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் திடீரென அவர்கள் 2 பேரும் குடிநீர் பாட்டிலில் எடுத்து வந்த மண்ணெண்ணையை தங்களது உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில் சக்திவேல் கூறுகையில், எனக்கு செந்தமாக 15 சென்ட் நத்தம் பட்டா இடம் உள்ளது. இந்த இடத்துக்கு எனது உறவினர்கள் போலியாக ஆவணங்கள் தயாரித்து பட்டா வாங்கியுள்ளனர். இதற்கு உடந்தையாக நிலஅளவையாளர் ஒருவர் செயல்பட்டுள்ளார். இது குறித்து அதிகாரிகளிடம் நான் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்து நானும், எனது மனைவியும் தற்கொலைக்கு முயன்றோம். எனவே போலி ஆவணங்கள் தயாரித்து எனது இடத்துக்கு பட்டா வாங்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதையடுத்து அவர் தனது கோரிக்கை குறித்த மனுவை கலெக்டர் ஷ்ரவன்குமாரிடம் கொடுத்தார். மனுவை பெற்ற அவர், இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

1 More update

Next Story