போலீஸ் நிலையத்தில் பெண் இறந்தது எப்படி?


தினத்தந்தி 11 Oct 2023 2:00 AM IST (Updated: 11 Oct 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

குழந்தை கடத்தல் வழக்கில் பிடிபட்ட பெண், போலீஸ் நிலையத்தில் இறந்தது எப்படி? என்று மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார்.

கோயம்புத்தூர்
குழந்தை கடத்தல் வழக்கில் பிடிபட்ட பெண், போலீஸ் நிலையத்தில் இறந்தது எப்படி? என்று மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார்.


இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-


கோவிலுக்கு சென்றனர்


குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மணவாளபுரத்தை சேர்ந்தவர் முத்துராஜ். இவர் தனது மனைவி மற்றும் 1½ வயது குழந்தை ஹரீஷ் மற்றும் குடும்பத்தினருடன் குலசை முத்தாரம் மன் கோவிலுக்கு சென்றார். பின்னர் அவர்கள் அனைவரும் திருச்செந்தூர் சென்று கடலில் குளிக்க சென்றனர்.


அப்போது அவர்களுக்கு சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த திலகவதி (40) என்பவர் பழக்கமானார். இந்த நிலையில் முத்து ராஜ் கடைக்கு சென்ற போது குழந்தை ஹரீஷ் அழுது கொண்டே இருந்தது.


குழந்தை கடத்தல்


அப்போது ஐஸ்கிரீம் வாங்கி கொடுப்பதாக கூறி குழந்தையை திலகவதி தூக்கிச்சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் குழந்தையுடன் திரும்பி வரவில்லை. இது பற்றி குடும்பத்தினர் கடைக்கு சென்று திரும்பிய முத்துராஜிடம் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது குடும்பத்தினருடன் அந்த பெண்ணையும், குழந்தையையும் தேடினார்கள். ஆனால் கிடைக்கவில்லை.


உடனே அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூர் முருகன் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் கோவில் பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்கா ணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில், திலகவதி அந்த குழந்தையை கடத்திக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ஒருவருடன் செல்வது தெரிய வந்தது.


தம்பதி கைது


இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் திலகவதி தனது கணவர் பாண்டியன் என்பவருடன் சேர்ந்து குழந்தையை கடத்தியதையும், அவர்கள் கோவை மாவட்டம் பூண்டி அருகே முட்டத்துவயல் பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.


உடனே இது பற்றி அவர்கள் ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஆலாந்துறை போலீசார் நேற்று முன்தினம் அங்கு சென்று கணவன்-மனைவியை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர்களை ஆலாந்துறை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள்.


மயங்கி விழுந்து சாவு


அப்போது கழிவறைக்கு செல்வதாக கூறி சென்ற திலகவதி சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து அங்குள்ள இருக்கையில் அமர்ந்தார். சிறிது நேரத்தில் அவர் திடீரென்று மயங்கி கீழே சரிந்தார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை மீட்டு போளுவாம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


இது குறித்து தகவல் அறிந்த உயர் அதிகாரிகள் ஆலாந்துறை போலீஸ் நிலையத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் போலீஸ் நிலையத்தில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் திலகவதி, கழிவறை செல்வதும், வந்து இருக்கையில் அமர்ந்ததும் சில வினாடிகளில் மயங்கி கீழே சரிவதும் பதிவாகி இருந்தது.



குழந்தை கடத்தல் சம்பவத்தில் கைதான பெண் போலீஸ் நிலை யத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் எப்படி உயிரிழந்தார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் போலீஸ் நிலையத்தில் அமர்ந்து இருந்த திலகவதி, விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


இந்த நிலையில் அவருடைய உடல் கோவை அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த திலகவதியின் உறவினர்கள் நேற்று காலையில் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.


மாஜிஸ்திரேட் விசாரணை


இதற்கிடையே நேற்று காலையில் கோவை 5-வது கோர்ட்டு மாஜிஸ்திரேட் சந்தோஷ் ஆலாந்துறை போலீஸ் நிலையத்துக்கு சென்று திலகவதியின் சாவு குறித்து போலீசாரிடம் விசாரணை நடத்தினார்.


இதையடுத்து மாஜிஸ்திரேட் முன்னிலையில் திலகவதியின் உடல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சட்டம் சார்ந்த மருத்துவத் துறை தலைவர் டாக்டர் ஜெய்சிங் தலைமையில் மருத்துவக் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.


பிரேத பரிசோதனை முடிந்ததும், உடலை திலகவதியின் உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். அவர்கள் திலகவதியின் உடலை பெற்றுச்சென்றனர்.


இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-


பிரேத பரிசோதனை அறிக்கை


குழந்தை கடத்தல் தொடர்பாக திலகவதி, பாண்டியன் ஆகியோ ரை கைது செய்து ஆலாந்துறை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினோம். அப்போது கழிவறை செல்வ தாக திலகவதி தெரிவித்தார். உடனே பெண் போலீசார் அவரை போலீஸ் நிலையத்தில் இருக்கும் கழிவறைக்கு அழைத்துச் சென்றனர்.


சிறிது நேரம் கழித்து அவர் வெளியே வந்து ஏற்கனவே இருந்த இருக்கையில் அமர்ந்தார். அவர், அடுத்த 10 நிமிடத்தில் திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். அவருடைய வாய் மற்றும் மூக்கு பகுதியில் இருந்து ரத்தம் வழிந்தது. அவருடைய கையில் வெள்ளை நிற பவுடர் போன்று இருந்தது.


அது விஷப்பொருளா? அதை தான் அவர் தின்று தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொடிய விஷத்தை வாங்கி வைத்து சாப்பிட்டாரா என்பது தெரியவில்லை. பிரேத பரிசோ தனை அறிக்கை கிடைத்த பின்னர் தான் முழு விவரமும் தெரிய வரும்.


இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.



Next Story