தூய மரியன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்


தூய மரியன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 11 Sept 2023 4:00 AM IST (Updated: 11 Sept 2023 4:01 AM IST)
t-max-icont-min-icon

மேல் கூடலூர் தூய மரியன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நீலகிரி

கூடலூர்

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட மேல் கூடலூரில் தூய மரியன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் வருடாந்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பங்கு தந்தை வின்சென்ட் தலைமையில் பங்கு மக்கள் பாடல்களை பாடியவாறு முக்கிய சாலை வழியாக ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து ஆலயத்தை வந்தடைந்தனர். பின்னர் சிறப்பு பிரார்த்தனைகளுடன் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து திருப்பலி நடைபெற்றது. இதில் பங்கு தந்தை சார்லஸ் பாபு மற்றும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இன்று (திங்கட்கிழமை) மாலை 5.15 மணிக்கு பங்கு தந்தை ஜான்சன் தலைமையில் ஜெபமாலை, திருப்பலி நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) பங்கு தந்தை ஆண்டனி வின்சென்ட் தலைமையில் மறையுரை ஆராதனை, தேர் பவனி நடக்கிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை) மாலை 5.15 மணிக்கு திருப்பலி, மறையுரை நிகழ்ச்சி நடக்கிறது. 14, 15, 16-ந் தேதிகளில் சிறப்பு பிரார்த்தனைகள் நடக்கிறது. வருகிற 17-ந் தேதி காலை 10 மணிக்கு உதகை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் திருப்பலி, புதுநன்மை மற்றும் அன்பின் விருந்து நடக்கிறது. மாலை 5 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து ஆடம்பர தேர் பவனி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


Next Story