ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை வெளியேற்ற அனுமதி கோரிய வழக்கு ஒத்திவைப்பு - ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மேலாளர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
மதுரை,
தூத்துக்குடி வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மேலாளர் சுமதி ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளையும், மூலப்பொருட்களையும் வெளியேற்ற அனுமதி கோரிய வழக்கை விசாரித்த கோர்ட்டு இந்த வழக்கின் மீதான அடுத்தகட்ட விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இதனிடையே தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக குரல் எழுப்பி தர்ணாவில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story