துபாயில் கனமழை, வெள்ளம்: சென்னையில் 10 விமானங்கள் ரத்து


துபாயில் கனமழை, வெள்ளம்: சென்னையில் 10 விமானங்கள் ரத்து
x

தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

துபாயில் பாலைவனம் நிறைந்த பகுதிகள் அதிகளவில் உள்ளன. வெப்பநிலையும் அதிகரித்து காணப்படும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் நேற்று பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சாலைகளில் நீர் தேங்கியது. பல இடங்களில் வாகன போக்குவரத்தும் முடங்கியது.

கனமழை மற்றும் வெள்ளம் எதிரொலியாக, விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துபாய் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளநீர் புகுந்ததையடுத்து விமான நிலையம் மூடப்பட்டது. இதேபோன்று, துபாயில் உள்ள துபாய் மால், அமீரக மால் உள்ளிட்ட வணிக வளாகங்கள் மற்றும் பிற முக்கிய கட்டிடங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஐக்கிய அரபு நாடுகளில் பெய்து வரும் கனமழை காரணமாக துபாய், சார்ஜா, குவைத் நகரங்களுக்கு சென்னையில் இருந்து செல்லும் 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதைபோல மறுமார்க்கத்தில் இருந்து வர வேண்டிய 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.


Next Story