கோத்தகிரி அருகே கனமழை காரணமாக பயங்கர நிலச்சரிவு
நிலச்சரிவால் 10-க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.
நீலகிரி,
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக, சோலூர் மட்டம் அருகே பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலச்சரிவால் 50 மீட்டர் நீளத்திற்கு சாலை அடியோடு பெயர்ந்து சேதமடைந்தது. இதனால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் நீலகிரிக்கு பேருந்துகளை இயக்க முடியாத சூழல் நிலவுகிறது. மேலும், நிலச்சரிவு காரணமாக கரிக்கையூர் மற்றும் மெட்டுக்கல் பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் மின்சாரமின்றி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
Related Tags :
Next Story