குண்டாறு அணை பகுதியில் ரூ.1½ கோடியில் வளர்ச்சி பணிகள்


குண்டாறு அணை பகுதியில் ரூ.1½ கோடியில் வளர்ச்சி பணிகள்
x
தினத்தந்தி 11 Jun 2023 12:30 AM IST (Updated: 11 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

குண்டாறு அணை பகுதியில் ரூ.1½ கோடியில் வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணை பகுதியில் ரூ1.50 கோடியில் ஓட்டல், தங்கும் விடுதிகள் உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் தொடங்கப்பட உள்ளன. இந்த பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இதில் சுற்றுலாத்துறை செயலாளர் சந்தீப் நந்தூரி, தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன், தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், தனுஷ் குமார் எம்.பி.,. புதூர் பேரூராட்சி மன்ற தலைவர் ரவிசங்கர், செங்கோட்டை நகர செயலாளர் வழக்கறிஞர் வெங்கடேசன், முன்னாள் நகர்மன்ற தலைவர் ரஹீம், தென்காசி யூனியன் சேர்மன் ஷேக் அப்துல்லா, கவுன்சிலர்கள் பேபிரெசவு பாத்திமா, இசக்கிதுரைபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.




Next Story