மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி


மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி
x

கோப்புப்படம்

200 வினாடி இலக்கை கடந்து என்ஜின் வெற்றிகரமாக இயக்கி சோதனை நடத்தப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

பணகுடி,

நெல்லை மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துவதற்கு தேவையான கிரையோஜெனிக் என்ஜின் தயாரிக்கப்பட்டு பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கிரையோஜெனிக் ஏ-17 என்ஜினின் முதல்கட்ட சோதனை 200 வினாடிகள் நடத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி நேற்று மாலையில் மகேந்திரகிரி இஸ்ரோ மைய இயக்குனர் ஆசீர் பாக்கியராஜ் முன்னிலையில், ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் கிரையோஜெனிக் ஏ-17 என்ஜின் சோதனை நடைபெற்றது. நிர்ணயிக்கப்பட்ட 200 வினாடி இலக்கை கடந்து என்ஜின் வெற்றிகரமாக இயக்கி சோதனை நடத்தப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.


Next Story