மக்கள் குறைதீர்க்கும் முகாம்
மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
நாகப்பட்டினம்
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு பிலிப் பிராங்கிளின் கென்னடி முன்னிலை வகித்தார். முகாமில் பெறப்பட்ட 7 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு உத்தரவு பிறப்பித்தார். தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கூறும் போது:- நாகை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடக்கும். பொதுமக்கள் போலீசாரிடம் நேரடியாக வந்து தங்களது குறைகளை தெரிவிக்கலாம். மேலும் சாராய விற்பனை, கஞ்சா விற்பனை குறித்து புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். நேரடியாக வர முடியாதவர்கள், அவசர உதவிக்கு 10581 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றார்.
Related Tags :
Next Story