பெரிய பொன்னாச்சி அம்மன் கோவில் பங்குனி தேரோட்டம்
பெரிய பொன்னாச்சி அம்மன் கோவில் பங்குனி தேரோட்டம் நடந்தது.
நொய்யல் அருகே அத்திப்பாளையத்தில் பெரிய பொன்னாச்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பங்குனி தேரோட்டத்தை முன்னிட்டு காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து கொண்டு கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்பட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ேதரில் எழுந்தருளினார். பின்னர் தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடந்தது. தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. அப்போது ஒவ்வொரு வீதியிலும் கூடி நின்ற திரளான பக்தர்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் தேர் நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து திரளான பெண்கள் பொங்கல் வைத்தும் மற்றும் மாவிளக்கு எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு வாண வேடிக்கை நடைபெற்றது.