கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: ரவுடி கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ரவுடி கருக்கா வினோத் மீது ஏற்கனவே பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன.
சென்னை,
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை 1வது நுழைவுவாயில் முன் கடந்த மாதம் 25ம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோட முயன்ற நபரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் ரவுடி கருக்கா வினோத் என்பதும் அவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டுவீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி கருக்கா வினோத்தை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.