தங்கம் விலை மீண்டும் உயர்வு- சவரனுக்கு ரூ.160 அதிகரித்தது
தங்கம் விலை அடுத்தடுத்த நாட்களில் விலை உயர்ந்து சவரனுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் கடந்து விடுமோ என்ற கவலை பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது.
சென்னை,
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை அன்று தங்கத்தின் விலை கிராமுக்கு பத்து ரூபாய் குறைந்த போதிலும், தங்கம் விலை தொடர்ந்து உயர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வணிகர்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை உயர்வுடன் துவங்கியுள்ளது.
ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 20 ரூபாய் உயர்ந்து ரூ.6,250 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 49 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வாரத்தின் முதல் நாளிலேயே ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 வரை உயர்ந்திருப்பது பொதுமக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story