"ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்குவது அவர்களை ஊக்குவிக்கும் செயல்" - மதுரை ஐகோர்ட் கண்டனம்

ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்குவது அவர்களை ஊக்குவிக்கும் செயல் என்று மதுரை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
மதுரை,
கன்னையாகுமரி மாவட்டம் குளத்தூர் பகுதியில் பறக்கை கால்வாய் ஆக்கிரமிப்பு தொடர்பாக ஐகோர்ட் மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் சட்ட ஒழுங்கு பிரச்சினை வரும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்குவது அவர்களை ஊக்குவிக்கும் செயல் என்று கண்டித்தார். மேலும், குமரி மாவட்டம் பறக்கை கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை தள்ளி வைத்தார்.
Related Tags :
Next Story