கரட்டுமலை கருணை காத்த மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கரட்டுமலை கருணை காத்த மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
தூத்துக்குடி
கழுகுமலை:
கழுகுமலை அருகே உள்ள கரட்டுமலை கருணை காத்த மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 28-ந்தேதி தொடங்கியது. அன்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், புன்னியாவாஜனம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடந்தது. இரவு 7 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. நேற்று அதிகாலை 4.30 மணியளவில் மங்கள இசையுடன் மஹா கணபதி ஹோமம், தேவதைகளுக்கு வேதிகா பூஜை, வேத பாராயணம் மற்றும் விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 7.30 மணியளவில் கருணை காத்த மாரியம்மன் மற்றும் வெற்றி விநாயகர், வைரவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மஹா அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story