விநாயகர் சதுர்த்தி விழா


விநாயகர் சதுர்த்தி விழா
x

சோளிங்கரில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

ராணிப்பேட்டை

விநாயகர் சதுர்த்தியையொட்டி சோளிங்கர் வடடாரத்திற்கு உட்பட்ட 100 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்தனர். சோளிங்கர் பஸ்நிையத்தில் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் 10 அடி உயர விவசாய விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜை செய்தனர். இதில் சோளிங்கர் தொகுதி ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ., பா.ம.க. மாநில சமூக நீதிப்பேரவை துணை செயலாளர் சக்கரவர்த்தி, நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத்தலைவர் பழனி, அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயன், இன்ஸ்பெக்டர் பாரதி, சப்- இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், ஆட்டோ சங்க தலைவர் சேகர், நகராட்சி கவுன்சிலர் டி.கோபால், சாரதி, வழக்கறிஞர் லோகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கற்பூர ஆரத்தி காண்பித்து வழிப்பட்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அதேபோன்று கணபதி முதலி தெருவில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜையில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சிவானந்தம், பாண்டியன் ஓட்டல் உரிமையாளர் பாண்டியன் கலந்து கொணடு சாமி தரிசனம் செய்து, ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார்கள்.

குட்டைத்தெருவில் நடைபெற்ற பூஜையில் ஏ.எம்.முனிரத்தினத்தின் மகன்கள் ஏ.எம்.நவீன், ஏ.எம்.திலிப், நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன், சின்னையன், கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். போலீஸ் லைன் தெருவில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜையில் நகராட்சி உறுப்பினர் ஏ.எல்.மணிகண்டன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஏ.எல்.விஜயன், பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story