ஐஏஎஸ் அதிகாரியின் குற்றச்சாட்டுக்கு ககன் தீப் சிங் பேடி பரபரப்பு விளக்கம்


ஐஏஎஸ் அதிகாரியின் குற்றச்சாட்டுக்கு ககன் தீப் சிங் பேடி பரபரப்பு விளக்கம்
x

ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியராக பணியாற்றி வரும் மனிஷ் நர்னாவேர் குற்றச்சாட்டுக்கு ககன் தீப் சிங் பேடி விளக்கமளித்துள்ளார்.

சென்னை,

ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியராக பணியாற்றி வருபவர் மனிஷ் நர்னாவேர். இவர், சென்னை மாநகராட்சி ஆணையராக ககன் தீப் சிங் பேடி இருந்த போது, மாநகராட்சி சுகாதாரத்துறை துணை ஆணையராக பணியாற்றினார். அப்போது, தன்னை சாதி ரீதியாக ககன் தீப் சிங் பேடி மோசமாக நடத்தியதாகவும், தற்போதைய சென்னை மாநகராட்சி ஆணையர் ராதகிருஷ்ணனுக்கும், தனக்கும் பிரச்சனை ஏற்படுத்த முயன்றதாகவும் தலைமை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால், தற்கொலை செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டதாக மனிஷ் நர்னாவேர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விளக்கம் அளித்த சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி, இந்த புகார் அதிர்ச்சியளிக்கிறது என்றும், ஈரோடு மாவட்ட ஆட்சியராக பணிபுரியும் மனிஷ் நர்னாவேர், ஆட்சியராக நியமிக்கப்பட்ட போது, தன்னிடம் வாட்ஸ்அப்பில் வாழ்த்து பெற்றதாகவும், பயிற்சி அளித்ததற்கு நன்றி தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

மேலும், மனிஷ் நர்னாவேர் தன்னிடம் பணியாற்றிய போது அடிக்கடி அவர் மன இறுக்கத்தில் இருந்ததாகவும் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.


Next Story