கோயம்பேட்டிலிருந்து, திருவண்ணாமலைக்கு தினசரி பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்துத்துறை அறிவிப்பு


கோயம்பேட்டிலிருந்து, திருவண்ணாமலைக்கு தினசரி பேருந்துகள் இயக்கப்படும்  - போக்குவரத்துத்துறை அறிவிப்பு
x
தினத்தந்தி 17 May 2024 4:20 PM IST (Updated: 17 May 2024 6:28 PM IST)
t-max-icont-min-icon

வரும் 23ம் தேதி முதல் கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தற்பொழுது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) மூலமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.திருவண்ணாமலை செல்லும் பயணிகள் பெரும்பாலானவர்கள் கோயம்பேடு மார்க்கெட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணி செய்து வருவதால் அவர்கள் திருவண்ணாமலை தடப்பேருந்துகளை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் மேற்கண்ட கோரிக்கையின் அடிப்படையில் வரும் 23ம் தேதி முதல் திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படும்.

1. சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம் செஞ்சி வழியாக 90 பேருந்துகள் இயக்கப்படும்.

2. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 44 பேருந்துகள் ஆற்காடு, ஆரணி வழியாகவும் மற்றும் தற்போது தினசரி கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம், வந்தவாசி வழியாக இயக்கப்படும் 11பேருந்துகளுடன் 30 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும். ஆக மொத்தம் 85 பேருந்துகள் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு தினசரி இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story