பொம்மிடியில் சாலை மறியலில் ஈடுபட்ட 39 பேர் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை


பொம்மிடியில் சாலை மறியலில் ஈடுபட்ட 39 பேர் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை
x
தினத்தந்தி 3 Sept 2023 1:00 AM IST (Updated: 3 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பொம்மிடி அருகே உள்ள மங்களம்கொட்டாய் பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 14 ந்தேதி அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. அப்போது, இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகி நந்தன் தலைமையில் பொம்மிடியில் விடுதலை சிறுத்தைகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து பொம்மிடி போலீசார் நந்தன் உள்ளிட்ட 59 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை பாப்பிரெட்டிப்பட்டி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று 39 பேரை நன்னடத்தை அடிப்படையில் ராஜேஷ் குமார் விடுதலை செய்தார்.


Next Story