பொங்கல் இலவச வேட்டி, சேலை திட்டம் - நிதி ஒதுக்கீடு


பொங்கல் இலவச வேட்டி, சேலை திட்டம் - நிதி ஒதுக்கீடு
x

2024 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளுக்காக வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை

2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வழங்கவுள்ள வேட்டி சேலை திட்டத்திற்கு உத்தேச உற்பத்தி இலக்கு நிர்ணயம் செய்து வழங்கிட தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது .

அதன்படி இலவச வேட்டி சேலைக்கான உற்பத்தி அனுமதி மற்றும் முன்பணமாக ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது .மேலும் வேட்டி சேலை வழங்கும் நடைமுறையை கண்காணிக்க வருவாய்த் துறை தலைமையில் கூடுதல் தலைமை செயலாளர் , கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர், வருவாய்த் துறை மற்றும் கைத்தறி ஆணையர் ஆகியோர் அடங்கிய குழுவினை அமைக்க உத்தரவிடபட்டுள்ளது. ரேசன் கடைகளில் வேட்டி சேலைகள் வாங்குவதை உறுதி செய்ய விரல் ரேகை பதிவு கட்டாயம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .

இதனை செயல்படுத்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆணையர், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிடப்படுகிறது என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story