இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி
கீழ்பென்னாத்தூர் தாலுகாவில் இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகாவில் உள்ள 77 கிராமங்களில் வசிக்கும் அரசின் முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு உதவி தொகைகளை பெறும் பெண்கள் 8,486 பேருக்கும், ஆண்கள் 3,334 பேருக்கும் என மொத்தம் 11,820 பேருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சிஆறுமுகம், நகர செயலாளர் அன்பு, முன்னாள் பேரூராட்சி தலைவர் பன்னீர்செல்வம், பேரூராட்சி தலைவர் சரவணன், துணைத்தலைவர் தமிழரசி சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் சக்கரை வரவேற்றார்.
நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்துகொண்டு இலவச வேட்டி, சேலைகளை வழங்கி பேசினார். இதில் தலைமையிடத்து துணை தாசில்தார் தனபால், மண்டல துணை தாசில்தார் வேணுகோபால், வருவாய் ஆய்வாளர் நந்தகோபால், கிராம நிர்வாக அலுவலர்கள் சுதாகர், பிரவீன்குமார், பேரூராட்சி கவுன்சிலர்கள் பாக்யராஜ், ஜீவாமனோகர், அம்பிகாராமதாஸ், மணி, ஒன்றிய பிரதிநிதி அருள்மணி, நகர துணை செயலாளர் இளங்கோ, வட்ட செயலாளர் செல்வம் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.