பள்ளிப்பட்டு தாலுகாவில் சாலையை சீரமைக்க கோரி நடிகை ரோஜாவிடம் முன்னாள் எம்.எல்.ஏ. மனு
பள்ளிப்பட்டு தாலுகாவில் சாலையை சீரமைக்க கோரி நடிகை ரோஜாவிடம் முன்னாள் எம்.எல்.ஏ. மனு அளித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அத்திமாஞ்சேரி பேட்டையில் இருந்து ஆந்திர மாநிலம் நகரிக்கு சாலை ஒன்று செல்கிறது. இந்த சாலையை மாவட்ட முதன்மை சாலையாக 2008-2009-ம் ஆண்டில் அன்றைய முதல்-அமைச்சர் மு.கருணாநிதி அறிவித்தார். இந்த சாலை ஆந்திர பகுதியில் முடிப்பள்ளி என்ற கிராமம் அருகே முடிவடைகிற இடத்தில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை செப்பனிடப்படாமல் இருந்து வருகிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் சாலை செப்பனிடப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பள்ளிப்பட்டு சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., இ.எஸ்.எஸ். ராமன் நேற்று ஆந்திர சுற்றுலாத்துறை மந்திரி நடிகை ரோஜாவை நேரில் சந்தித்து இச்சாலையை செப்பனிட கோரி மனு அளித்தார். அதைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் ரோஜா சிறப்பாக செப்பனிட்டு தருவதாக உறுதி அளித்தார். இந்த கோரிக்கை தொடர்பாக ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டிக்கும், முன்னாள் எம்.எல்.ஏ. ராமன் கடிதம் அனுப்பி உள்ளார்.