பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்-முன்னாள் அமைச்சர் சத்திய மூர்த்தி பேச்சு

பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார் என முன்னாள் அமைச்சர் சத்திய மூர்த்தி கூறினார்.
சாயல்குடி
பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார் என முன்னாள் அமைச்சர் சத்திய மூர்த்தி கூறினார்.
செயல் வீரர்கள் கூட்டம்
கடலாடியில் தி.மு.க. தெற்கு ஒன்றியம் சார்பில் தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. கடலாடி தெற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் மாயகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் ராஜசேகர பாண்டியன் வரவேற்றார். மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் ராமர், முன்னாள் கடலாடி ஒன்றிய துணை சேர்மன் பத்மநாதன், இளைஞர் அணி அமைப்பாளர் சத்தியேந்திரன், ஒன்றிய துணைச் செயலாளர் சர்புதீன், முத்துலட்சுமி பாண்டி, ராமகிருஷ்ணன், ஒன்றிய பொருளாளர் முனியசாமி, மாவட்ட பிரதிநிதிகள் முருகன், புண்ணியவேல், கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் மற்றும் பயிர் இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்ற ேதர்தல்
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி கூறியதாவது, தி.மு.க. ஆட்சியில் பெண்கள் முன்னேற்றம் அடைவதற்காக பல நல்ல திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறச் செய்ய வேண்டும். ஊராட்சிகளில் தி.மு.க.விற்கு அதிக உறுப்பினர்கள் சேர்க்கும் 5 நபர்களுக்கு மோதிரம் பரிசாக வழங்கப்படும் என்றார். கூட்டத்தில் விவசாய அணி துணை அமைப்பாளர் ஆப்பனூர் குருசாமி, தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் கண்ணன், அரசு வழக்கறிஞர் சொக்கணை முனியசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் அம்மாவாசி, பானுமதி ராமமூர்த்தி, செய்யது ராவியா, ஊராட்சித் தலைவர்கள் பரக்கத் ஆயிஷா சைபுதீன், பெரியகுளம் முத்துமாரி நீர்ப்பாசன சங்கத் தலைவர் ரவீந்திரநாதன், இளைஞர் அணி முரளிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.