தமிழகத்தில் முதல் முறையாக அதி நவீன ட்ரோன் -7 கி.மீ. தூரம் வரை கவரேஜ்
குற்றவாளிகளை அடையாளம் கண்டுவிட்டு மார்க் செய்துவிட்டால், அவர்களை மட்டும் காண்காணிக்கும் திறன் கொண்டது.
தருமபுரி,
குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் அதிநவீன டிரோன் கேமரா தமிழகத்தில் முதல் முறையாக தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் கிராமத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
காவல் உதவி ஆய்வாளர் ஜவஹர் குமார் என்பவர், குற்றவாளிகளை எளிதில் அடையாளம் கண்டு, கைது செய்ய ஏதுவாக டிரோம் கேமரா ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதன் மூலம் காவல் நிலையத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரம் வரை போக்குவரத்து நெரிசல், விபத்துக்களை கண்டுபிடிக்கமுடியும் எனவும் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
குற்றவாளிகளை அடையாளம் கண்டுவிட்டு மார்க் செய்துவிட்டால், அவர்களை மட்டும் காண்காணிக்கும் திறன் இருப்பதாகவும், இதனால், குற்றவாளிகளை எளிதில் பின் தொடர்ந்து கைதுசெய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story