நெல்லையில் மீன் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை - ரசாயனம் ஏற்றப்பட்ட மீன்கள் பறிமுதல்
‘பார்மலின்’ ரசாயனம் பயன்படுத்தப்பட்ட 40 கிலோ மீன்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் கடலில் இருந்து பிடிக்கப்பட்ட மீன்கள் 3 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்க 'பார்மலின்' என்ற ரசாயனத்தை மீன்களில் பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகின. 'பார்மலின்' ஏற்றப்பட்ட மீன்களை வாங்கி உண்ணும் பொதுமக்களுக்கு வயிற்று கோளாறு, வாந்தி, சிறுநீரக கோளாறு உள்ளிட்டவை ஏற்படுகின்றன.
இது தொடர்பாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், பாளையங்கோட்டையில் உள்ள மீன் கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 'பார்மலின்' ரசாயனம் பயன்படுத்தப்பட்ட 40 கிலோ மீன்களையும், ஒரு கிலோ கெட்டுப்போன மீன்கள் அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
Related Tags :
Next Story