சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை


சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை
x

தொடர் மழை எதிரொலியாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தமபாளையம்,

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சுருளி அருவி உள்ளது. 'குட்டி குற்றாலம்' என்று அழைக்கப்படும் இந்த அருவியில் குளிப்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களாக தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு சுருளி அருவியில் நீர் வரத்து பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்ததால் இன்று காலை சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்கவும், அருவிக்கு செல்லவும் மாவட்ட வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் சுருளி அருவிக்கு வந்து குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

கம்பம் கிழக்கு வனத்துறையினர் தொடர்ந்து அருவிப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story