கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிப்பு


கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிப்பு
x

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தேனி,

தேனி மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் தேனி மாவட்டமே குளு, குளுவென மாறியுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர் மழையால் கும்பக்கரை அருவி, சுருளி அருவி, 'சின்னச்சுருளி' என்றழைக்கப்படும் மேகமலை ஆகிய 3 அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து பாதுகாப்பு கருதி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவிக்கு செல்லவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் மழைப்பொழிவு குறைந்து அருவிக்கு வரும் நீரின் அளவு சீராகும் வரை இந்தத் தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தேனியில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மஞ்சளார் அணையின் நீர்வரத்து 50 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 50 கனஅடியாக நீர் வெளியேற்றப்படுகிறது. தற்போது மஞ்சளார் அணையின் நீர் இருப்பு 435.32 மி. கனஅடியாக உள்ளது.


Next Story